\
2022ஆம் ஆண்டு அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.