2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த 3வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் விசேட ஆராதனை இடம்பெற்றது, இதில் கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்கள் கலந்துகொண்டார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இலங்கை முழுவதும் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டது.
விசேட ஆராதனையில் உரையாற்றிய பேராயர், தாக்குதல்களின் தலைவர் சஹ்ரான் ஹாசிமைக் கைது செய்யாததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி தனது கடமைகளில் தவறிவிட்டார்.
சஹ்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் பல குழுக்களின் நோக்கங்கள் கிறிஸ்தவ சமூகத்திற்கு இத்தகைய சோகத்தை ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
கிறிஸ்தவ சமூகத்தின் நீதிக்கான அழைப்பை நோக்கி அதிகாரிகள் தொடர்ந்து கண்மூடித்தனமாக இருப்பதற்காக பேராயர் மேலும் கண்டனம் தெரிவித்தார்.
தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தற்போதைய ஆட்சி தவறிவிட்டதாக கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதைய நிர்வாகம் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் தடுக்க முயற்சிக்கிறது என்றார்.