நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக மக்கள் கோரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இடைக்கால தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என நாட்டைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் வண. எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய நெருக்கடிக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு தருணத்தில் அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்கள் இன்றி மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.