Our Feeds


Friday, April 29, 2022

ShortNews Admin

மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாததால் எரிபொருள் நிரப்பு நிலையம்மீது பொதுமக்கள் தாக்குதல்!

  


தளுபத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்

மண்ணெண்ணெய் பெறுவதற்காக நேற்று (28) காத்திருந்த பொதுமக்கள் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டது என்று உரிமையாளர் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.


இந்த சம்பவத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அலுவலக கண்ணாடிகள் பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டன.




மண்ணெண்ணெய் பெறுவதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். இந்த நிலையில் மின்சாரத்தடை காரணமாக இரண்டு தடவைகள் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டது.


இரண்டாவது தடவை மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின்சாரம் வந்த பிறகு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.




இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருள் நிலையத்தின் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் பலவற்றுக்கும் சேதத்தை ஏற்படுத்தினர்.


அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.




எரிபொருள் நிரப்பு நிலைய களஞ்சியத்தில் மண்ணெண்ணெய் இருப்பதாகவும் அதனை விநியோகிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர்.


நிரப்பு நிலைய உரிமையாளர் மண்ணெண்ணெய் இல்லை என்று தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் இருக்கிறதா? இல்லையா ? என்பதைப் பார்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.


பின்னர் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது. இருநூறுக்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர்.


10.00 மணியளவில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. பதினொரு மணியளவில் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலர் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் வீடு திரும்பினர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »