ஜனாதிபதிக்கு மேலும் ஒரு வருட அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன போராட்டக்காரர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க இன்னும் ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதியை வீட்டிற்கு செல்லுமாறு கோர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சந்திரசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.