“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட போஷகர் பதவியில் நான் நீடிக்கின்றேன். என்னை எவரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. கட்சியில் உள்ள கள்வர்களை விரட்டினால், கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார். தற்போதைய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் கட்டாயம் பதவி விலக வேண்டும்” – என்றார்.