ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், தமது கட்சி ஜனாதிபதியை மாத்திரம் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளிலிருந்து மீண்டெழுவதற்கு, அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடன் சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற விதத்தில் கொள்கை ரீதியில் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தார்.
அரசாங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கும், சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும் கடிதமொன்றின் ஊடாக இந்த இணக்கத்தை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
இதன்படி, இந்த இணக்கப்பாட்டிற்கு அமைவான முதலாவது சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.