புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று (16) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதன்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள், ஆளுந்தரப்பின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, சர்வதேச நாணய நிதித்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பில், இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இந்தக் கூட்டம் இடம்பெறும் திகதி மற்றும் இடம் என்பன குறித்து இதுவரையில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.