Our Feeds


Friday, April 8, 2022

Anonymous

கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு மத்தியில் பொலிசாருக்கு ரோஜாப் பூ வழங்கிய இளம் பெண்.

 



மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி இன்று (08) பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியொன்று இன்று பிற்பகல் களனியிலிருந்து பாராளுமன்றத்தை சென்றடைந்தது.

எனினும் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது இளம் பெண் ஒருவர் கையில் ரோஜாவுடன் பொலிஸாரை நோக்கி நடந்து சென்றார்.

அவர் குறித்த ரோஜாவை ஒரு பொலிஸ் அதிகாரியிடம் கொடுத்த நிலையில் பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »