(இராஜதுரை ஹஷான்)
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சியினரும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுயநல அரசியல் நோக்கில் செயற்படக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள், இனவாத செயற்பாடுகளுக்கு பௌத்த மத தலைவர்களில் ஒரு சிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது எனவும் அதிருப்தி வெளியிட்டார்.
ஆயிரம் பௌத்த தேரர்களின் பங்குப்பற்றலுடன் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சங்கமகா பிரகடனத்துக்கான மகா சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.