மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக் களத்திற்கு அருகில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் தெளிவூட்டியுள்ளது.