எரிபொருள் விலையுடன் தொடர்புபட்ட கட்டுமா
னப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது மணல் கியூப் ஒன்றின் விலை மட்டும் 8,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக அதன் துணைத் தலைவர் எம்.டி.போல் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் சுமார் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.