இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடனுதவித்திட்டங்களினூடாக 40,000 மெட்ரிக்தொன் டீசல், உயர் ஸ்தானிகரால் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்படும் நான்காவது எரிபொருள் தொகுதி இதுவாகும். கடந்த 50 நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் தொன் எரிபொருள் இந்தியாவினால் இலங்கை விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தால் மின்சார சபைக்கு 6000 மெட்ரிக்தொன் எரிபொருளை விநியோகிக்கப்பட்டுள்ளது.