சி.எல்.சிசில்
அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், சீமெந்தின் புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சீமெந்து இருப்பு இல்லை எனவும் சிமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.