முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.