எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இந்தியா மேலதிகமாக 500 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பங்களாதேஷும் 450 மில்லியன் டொலர் பரிமாற்றக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார் என்று குறித்த ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.