நுகேகொடை - மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பில், பெண் ஒருவர், 44 ஆண்கள் உட்பட 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், பொலிசாருக்கு சொந்தமான ஒரு பேருந்து, ஒரு பொலிஸ் ஜீப் ரக வண்டி, 2 மோட்டார் சைக்கில்கள், ஒரு தண்ணீர்த்தாரை பிரயோக வாகனம் என்பனவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.