அமைச்சுப் பதவி மற்றும் பணம் தருவதாக ஆசை காட்டி விமல் வீரவன்சவின் கட்சி எம்.பி க்களை அபகரிக்க முயல்வதாக விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கூறினார்.
நேற்று பதவியேற்றுக் கொண்ட 5 இராஜாங்க அமைச்சர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு பணம் கொடுத்து பதவியும் கொடுத்துள்ளதாக எங்களுக்கு தெளிவான தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவமனைகளில் மருந்தில்லாமல் ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் செத்தாலும் பரவாயில்லை என மக்களுக்கான மருந்துகளை கொண்டுவருவதற்கு டொலர்களை செலவு செய்யாமல் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள டொலர்களை வழங்கியுள்ளார்கள்.