காலி-ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் இன்று காலை தனது பாரவூர்திக்கு டீசலை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து சுமார் ஒரு மணிநேரம் வரை அங்கு காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் காலி-ஹபரகடவைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.