குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால், டீசலுடன், டயர்கள், டியூப்கள், உராய்வு நீக்கிகள், உதிரிப் பாகங்கள் முதலான பஸ்ஸுடன் தொடர்புடைய பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளது என செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.