இந்திய கடன் எல்லை உதவி திட்டத்தின் கீழ், இன்று மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்படி, 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 265,000 மெற்றிக் தொன் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் அல்லது 22 ஆம் திகதிகளில் 37, 000 மெட்ரிக் தொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்