இன்று முதல் தௌபீக் எம்.பி, இஷாக் ரஹ்மான் எம்பிமாரும் நானும் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக பைசல் காசிம் எம்.பி சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியில் இருக்கும்போது தனக்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்த காரணத்தினாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாலும் நாங்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.