நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை பதவி விலகக்கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கொட்டும் மழையிலும் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.