உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகவீனமுற்ற கொக்கலை உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் பலாங்கொடை கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, இதனை உணவு விஷமடைந்தமையால் ஏற்பட்ட சுகவீனமாக இருக்கலாம் என நம்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.