சமையல் எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவில் கடமையாற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டுமெனவும், இது தொடர்பில் அந்த அதிகாரிகளுக்கு அழுத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் மாதாந்தம் 3 மில்லியன் ரூபா சம்பளம் பெறுவதாக தெரியவந்ததாகவும், அவ்வாறு சம்பளம் பெறுவதில் நியாயம் இல்லை எனவும் அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறு அதிக சம்பளம் பெறுவதை எதிர்ப்பதற்காக தான் லிட்ரோ நிறுவனத்திற்கு வருகைத்தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.