இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சுப் பதவியொன்றை பொறுப்பெடுக்குமாறு தன்னிடம் 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதாகவும் தான் அதனை மறுத்து விட்டதாகவும் மு.க பாராளுமன்ற உறுப்பினர் HMM ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக் கொடுத்த 20வது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பெரும் அதிருப்திக்குள்ளான MPக்களில் ஹரீசும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.