யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.