சுரேன் ராகவன் மற்றும் சாந்தபண்டார ஆகியோரை இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே நாளை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இல்லையென்றால் குறித்த கலந்துரையாடலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் சுதந்திரக்கட்சி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.