வீட்டில் உறக்கத்தில் உயிரிழந்தார் என பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட இளம் பெண் 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலம் இறப்பு விசாரணைகளின் பின் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவ முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.
சிறுமி இரண்டு மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.