சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (26) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ காந்தா அறிவித்துள்ளார்.
மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.