எரிவாயு சிலிண்டர்கள் தற்போது கையிருப்பில் இல்லாததன் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி வரை சந்தைக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாதென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் இதேபோன்று எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது.
இந்நிலையில், எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் 3600 மெற்றக் தொன் எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழமையான முறையில் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமெனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனசாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்காக எரிவாயு விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.