இலங்கையிலிருந்து இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை 9 மாத கைக்குழந்தை உட்பட 5 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டம் மற்றும் காக்காதீவைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் படகுகளில் தனுஷ்கோடியைடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையைச் சென்றடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.