வட் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரியினை 13 அல்லது 14 வீதமாக உயர்த்த வேண்டும் என, நிதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைக் கூறிய அவர்; 2019 ஆம் ஆண்டில் பெறுமதிசேர் வரியை (VAT) 08 வீதம் எனும் கணக்கில் பாதியாகக் குறைத்தமை – அரசாங்கம் செய்த தவறு என, இதன்போது ஒப்புக்கொண்டார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“வரிகளை அதிகரிக்க வேண்டும். எங்களின் வருவாய் மற்றும் செலவீன இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
15 வீதமாக இருந்த வற் வரியை 2019ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் 08 வீதமாகக் குறைத்தமை குறிப்பிடத்தக்கது.