மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை ஆதரவினைக் கொண்ட பிரதமராகியுள்ளார்.
இதேவேளை, எதிர்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்கு எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய சத்தியக் கடதாசி எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ‘தேசய’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.