சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பிரமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பதவியிலிருந்து துறக்காவிட்டால் ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழுவும் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிவரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது பதவியை விட்டுக் கொடுப்பதற்கு தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக சரியான தீமானங்களை எடுத்திருக்கிறார். தற்போதைய நிலைமையிலும் நாட்டுக்காக தீர்மானம் எடுப்பதற்கு தயார் என்ற அறிவிப்பை எங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் பிரதமருக்கு இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு சிலர் இடமளிப்பதில்லை என்ற சந்தேகம் எமது குழுவுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.