2022ஆம் வருடம் அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி குறித்து கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 19ஆம் திகதி தரம் ஒன்றுக்கான புதிய மாணவர் சேர்க்கை செயற்பாடுகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.