உணவு வகைகள் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு யூடியூப்பில் பிரபலமடைந்த இர்பானின் யூடியூப் பக்கத்தை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.
பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்ட இர்பான், தனது யூடியூப் செனலின் ஊடாக பலரது மனங்களை வென்றெடுத்தவர்.
பல நாடுகளுக்கு சென்று, தனது பதிவுகளை இர்பான் வெளியிட்டு வந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, இன்று அவரது யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இர்பானின் யூடியூப் பக்கம், யூடியூப் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாக அமைந்ததை அடுத்தே முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், சரியான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.