Our Feeds


Sunday, March 20, 2022

SHAHNI RAMEES

கொரோனா தொடர்பில் பரவி வரும் போலியான கருத்துக்கள் குறித்து WHO விளக்கம்!

 

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது முதலாவது போலியான கருத்தாகும்.

அதேபோல், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரொன் கொவிட் திரிபானது பலவீனமான வைரஸ் திரிபாகும் என்பது மற்றைய போலியான கருத்தாகும்.

மேலும் இந்த கொவிட் திரிபானது கடைசி கொவிட் திரிபாகும் என்பது மற்றுமொரு போலியான கருத்தாகும்.

இது போன்ற தவறான கருத்துகள் உலக வாழ் மக்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கொவிட் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொவிட் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்வாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »