Our Feeds


Monday, March 14, 2022

Anonymous

PHOTOS: பாலமுனையின் முள்ளிமலைக்கு சிலை வைக்க மீண்டும் சென்ற தேரர் குழு: உள்ளூர் அரசியல்வாதிகள், இளைஞர்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றது!

 


 

(பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை முள்ளிமலையை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த நிலையில் தகவலறிந்து அப்பகுதி இளைஞர்கள் அவ்விடத்தில் கூடியதனால் அவர்கள் மீண்டும் திரும்பி சென்றனர். இந்தச் சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென தெரிவித்து பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்கள் சிலரும் கடும் பாதுகாப்புடன் சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் போது தகவலறிந்து அங்கு சென்ற அப்பகுதி உள்ளுர் அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தேரர் தலைமையிலான குழு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மீண்டும் தேரர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தேரர் குழு வந்த தகவலையடுத்து அங்கு சென்ங கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பையும் வெளியிட்டதனையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »