கொழும்பு – நகர மண்டபத்திலுள்ள சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
டீசல் இல்லாமை காரணமாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
போராட்டம் காரணமாக தாமரை தடாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.