எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்து ஹட்டனில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்களும் பொதுமக்களும் இணைந்து ஹட்டனில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை மறித்து குறித்த போராட்டம் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றையும் வழிமறித்து, மீண்டும் ஹட்டன் நகருக்கே திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அறியமுடிகிறது.