இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
WEB LINK: https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/
WEB LINK: https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/
இதன் மூலம், எதிர்வரும் காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இலங்கையில் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆசனத்தை ஒதுக்கிக் கொள்ளக் கூடிய பயணம் மற்றும் புகையிரத வகுப்பு ஆகியவற்றை தெரிவு செய்து ஒரு சில படிமுறைகள் மூலம் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான கட்டணங்களை Visa, master மற்றும் Lanka QR உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவு முறைகளின் மூலம் மேற்கொள்ளலாம் என்பதுடன், m-Ticketing (365) சேவை கொண்ட நிலையங்களுக்கு வந்து பயணச்சீட்டிலுள்ள இலக்கத்துடன் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை சமர்ப்பித்து குறித்த முன்பதிவு செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை பெற முடியும்.