இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் Tan Yang Thai அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் 29ம் திகதி சந்தித்து இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.
1997 ஆம் ஆண்டில் ஆசிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்த மலேசியா, அதனை தீர்த்த விதம் குறித்தும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மலேசியா எதிர்கொண்ட விதத்தை இலங்கையின் தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசியுள்ளனர். மலேசியாவை போன்று வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இவ்வாறே நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டும் எனவும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இதன் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் இந்தோனோஷிய தூதுவர் Dewi Gustina Tobin அவர்களுடனும் விசேட சந்திப்பொன்றில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.