இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 1990 சுவசெரிய சேவையினை அறிமுகப்படுத்திய, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இடையில் இன்று (29) பிற்பகல் இராஜகிரியவில் உள்ள 1990 தலைமையகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 1990 அம்பியூலன்ஸ் சேவையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ஜெய்சங்கர், 1990 சுவசெரியவை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கொண்ட அர்ப்பணிப்புக்காக விசேட நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.