Our Feeds


Monday, March 28, 2022

ShortNews Admin

JVP யிடம் ரூ.100 கோடி நட்டஈடு கோருகிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் - காரணம் இதுதான்!



ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்கவுக்கு எதிராக 100 கோடி ரூபாய் நட்டஈடு கோரி, ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை குறித்தே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
வசந்த சமரசிங்க 20-02-2022 அன்று செய்தியாளர் மாநாட்டொன்றை  நடத்தினார்.

கலகெதர மற்றும் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு  விலை மனு கோரப்பட்டது.

மேற்கூறிய திட்டத்திற்கான  விலைமனு ஒப்புதல் CANC என  பெயரிடப்பட்ட  அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின்  விடயப்பரப்பின் கீழ் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனமான Metallurgical Corporation (MCC) மற்றும் இலங்கை நிறுவனமான Lanka Infrastructure Development Consortium ( LIDC)  ஆகிய நிறுவனங்கள் விலைமனு சமர்ப்பித்தன.

சீன நிறுவனமாக MCCஇனால் சமர்ப்பிக்கப்பட்ட தொகை 1,050 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் (ரூ. 210 பில்லியன்) மற்றும் LIDC  முன்வைத்த தொகை  1872 மில்லியன் டொலர் (ரூ. 374.4 பில்லியன்) எனவும்  குறைந்த விலை சமர்ப்பித்த நிறுவனத்தை நிராகரித்து அதிக விலை கோரிய LIDC  நிறுவனத்திற்கு CANC எனும் குழுவினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, LIDC குழுவுக்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்து அதன் உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுத்து MCC விலைமனுவை நிராகரித்து LIDC  விலைமனுவுக்கு ஆதரவாக செயற்பட்டு அதனூடாக மோசடி இடம்பெற பங்களித்ததாவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி மோசடியால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு  சுமாராக  164.4 பில்லியன் ரூபாவாகும், இது பிரபல பிணைமுறி மோசடியை விட பத்து மடங்கு அதிகமாகும்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தனது கட்சிக்காரர் மேற்படி  மோசடியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிப்பதன் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை ஏமாற்றி தவறாக வழிநடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   

இந்த செய்தியாளர் சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. அதன் இணைப்பு அவரது முகநூல் மூலம்  வௌியிடப்பட்டது.

மேலும்  பொதுமக்களுக்கு அவற்றை பார்ப்பதற்கு இடமளித்ததன் ஊடாக  மக்கள் மத்தியில்  கெட்டபெயரை ஏற்படுத்தி அதனை விளப்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பானதாகவும், அடிப்படையற்றதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி, 14 நாட்களுக்குள்  தனக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி அவருக்கு  எதிராக  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது  சட்டத்தரணி கசுன் வீரசேகர ஊடாக கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »