(எம்.எப்.எம்.பஸீர்)
வீட்டுப் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அழைத்துச் செல்லும் தோரணையில், அவர்களை விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் திட்டமிட்ட வலையமைப்பொன்று தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று துபாய்க்கு சென்றுள்ளது.
சிஐடியின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும், மனிதக் கடத்தல், மனித வர்த்தகம் மற்றும் சமுத்திர குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவின் சிறப்புக் குழுவே இவ்வாறு துபாய்க்கு பயணமாகியுள்ளது.