இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்படும் நாணய மாற்று நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி அவசர அறிக்கையொன்றை நேற்று (28) வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இலங்கையின் டொலர் உள்ளிட்ட கறுப்பு சந்தை நடவடிக்கைகள் அதிகளவில் செட்டியார் தெரு பகுதியிலேயே அதிகளவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக நேற்றைய தினம் (28) டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, செட்டியார் தெருவின் ஒரு சில இடங்களில் 380 ரூபா முதல் 390 ரூபா வரை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, செட்டியார் தெருவில் இன்றைய தினம் (29) டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.
ஒரு சில இடங்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 315 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 195,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (தமிழன்)