133 பேருடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம், தென் சீனாவில் உள்ள தெங்சியான் கவுண்டி பகுதியில் மலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
தற்போது விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.