Our Feeds


Sunday, March 20, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியாலோ பிரதமராலோ பசிலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை - ஹிருணிகா

 

மின்சார கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் எவரின் ஆலோசனையையும் செவிமடுப்பதில்லை தன்னிச்சையாக தீர்மானம் எடுக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.


 
இறுக்கமான பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கத்திற்கு எதிர்கட்சி ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறந்த பொருளாதார அறிவுள்ளது என தெரிவித்துள்ள அவர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிச்சையாக செயற்படுகின்றார் இந்தியாவிடமிருந்து பெற்ற கடனை செலவு செய்த பின்னர் அவர் கடன் பெறுவதற்காக வேறு ஒரு நாட்டிற்கு செல்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாலோ பிரதமராலோ பசில் ராஜபக்சவின் நடவடிக்கைளை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »