சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வழங்கி, தமது தொழிலை முன்னெடுத்து செல்ல இடமளிக்கப்படாத பட்சத்தில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணவக பொருட்களை கொண்டு வந்து, விறகு அடுப்பில் கொத்து தயாரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களை உரிய வகையில் விநியோகிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.
எரிவாயு பிரச்சினை காரணமாக இன்று வரை சுமார் 5000 திற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், வீடுகளில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதனால், சமையல் எரிவாயு பிரச்சினைக்கு விரைந்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு அசேல சம்பத் கோரிக்கை விடுக்கின்றார்.